ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட விபத்து! தூக்கி வீசப்பட்ட சூப்பர் சிங்கர் பாடகி

3 years ago 335
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர் என இரண்டு வகை நிகழ்ச்சிகளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் இருக்கின்றனர்.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று தற்போது தனி பாடல்களை பாடி ஆல்பங்களை வெளியிட்டு வருபவர் நித்யஸ்ரீ என்பதும் அவரது ஆல்பத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்தது

அந்த வகையில் சமீபத்தில் அவர் ஒரு ஆல்பம் குறித்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அவரை சில இளைஞர்கள் தூக்கி போடுவது போன்றும், அவர் மேலே இருக்கும் ஒரு கம்பியை பிடிப்பது போலவும் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. 

இந்த படப்பிடிப்பில் இளைஞர்கள் அவரை தூக்கி போடும் போது நித்யஸ்ரீ கம்பியை பிடிக்க தவறியதால் கீழே விழுந்தார். இதனால் அவர் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் இந்த விபத்து குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: 

ஒரு படப்பிடிப்பிற்கு பின்னால் கலைஞர்களின் எவ்வளவு உழைப்பு இருக்கிறது, உண்மை இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை. இருப்பினும் கலைஞர்கள் அவற்றைப் பற்றி கவலைப்படாமல் தங்களுடைய அதிகபட்ச உழைப்பினை கொட்டி வருகின்றனர்

ஒரு சிறிய விபத்துக்கே எனக்கு காயம் ஏற்பட்ட நிலையில் ஸ்டண்ட் கலைஞர்கள் தினமும் தங்கள் உயிரை பணயம் வைத்து பணி புரிகிறார்கள் என்பதை நினைக்கும்போதே பிரமிப்பாக உள்ளது. 

அவர்களுக்கு என்னுடைய சல்யூட். கலைஞர்களின் வாழ்க்கை ஆடம்பரமாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு அவர்களுடைய ஒவ்வொரு அசைவிற்கும் பின்னால் ஒரு வலி இருக்கிறது, ஒரு பெரிய பாதிப்பு இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்

ஒவ்வொரு கலைஞரும் எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் திரும்பி வந்து அவர்கள் தங்களுடைய இலக்கை அடைவதை மட்டுமே குறிக்கோளாக இருக்கின்றனர். அந்த வகையில் தான் நானும்’ என்று பதிவு செய்துள்ளார். நித்யஸ்ரீயின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...