ஸ்ருதியின் புதிய காதலர் இவரா! மும்பையில் ஜோடியாக சுற்றித்திரியும் போட்டோஸ் லீக்

3 years ago 292

நடிகர் கமல் ஹாசன் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் முன்னணி நடிகையாக தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்துவருகிறார்.

சமீபத்தில் இவர் நடித்த கிராக் படம் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இதையடுத்து, நடிகர் பிரபாஸ் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.


இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்து சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார். 

தற்போது தான் இரண்டாவது முறையாக காதலிப்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். பிரபல டூடுல் கலைஞர் சாந்தனு என்பவருடன் டேட்டிங் செய்து வருகிறாராம்.


சமீபத்தில் மும்பையில் இருவரும் கை கோர்த்தபடி செல்லும் புகைப்படங்கள் லீக்காகி வருகிறது. மேலும் பிறந்த நாளுக்கு ஸ்ருதிஹாசனை இறுக்கி அணைத்தபடி சாந்தனு அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...