ஹீரோயினாக நடித்த சங்கவியா இது? அவரது கணவர், குழந்தையைப் பாருங்க... .வைரலாகும் புகைப்பங்கள்

3 years ago 466

ஒருகாலத்தில் தொடர்ச்சியாக தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த பெருமைக்கு உரியவர் சங்கவி. அண்மையில் கொளஞ்சி படத்தில் அம்மா பாத்திரத்தில் ரீ எண்ட்ரி ஆகியிருந்தார். 

விஜயோடு அதிகப்படங்களில் நடித்திருந்தாலும், அஜித் நடித்த அமராவதிதான் சங்கவியின் முதல்படம். அன்றையகால முண்ணனி நடிகர்கள் அனைவரோடும் நடித்திருக்கும் சங்கவி சின்னத்திரையையும் விட்டுவைக்கவில்லை. 


சில தொடர்களில் நடித்திருந்தார். வயது ஏற, ஏற ஒருகட்டத்தில் சினிமாவில் பீல்ட் அவுட் ஆனார் சங்கவி. காவ்யா என இயற்பெயர் கொண்ட இவர், சினிமாவுக்காகத்தான் தன் பெயரை சங்கவி என மாற்றினார். தல அஜித்துடன் அமராவதி, தளபதி விஜய்யுடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா படங்களிலும் நடித்தார்.

கடந்த 2016ல் பெங்களூரைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற தொழிலதிபரை தன் 39வது வயதில் கல்யாணம் செய்தார். திருமணத்துக்குப்பின் நடிப்பை குறைத்துக்கொண்டவர் முழுநேர குடும்பஸ்திரியாக மிளிர்ந்தார். 

42வது வயதில் அழகான பெண் குழந்தைக்கு தாயானார். இப்போது அவரது பாப்பாவுக்கு 2 வயது ஆகிறது. நடிகை சங்கவியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கூடவே சங்கவியும், அவரது கணவர் வெங்கடேசனும் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படமும் இப்போது வைரலாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...