ஹேக் செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டர் பக்கம்!

1 year ago 138

1996 ஆம் ஆண்டில், தெலுங்கு படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ், 2010 ஆம் ஆண்டில் இருந்து நடித்து வருகிறார்.

அட்டகத்தி படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த இவர், விஜய் சேதுபதியுடன் நடித்து சற்று பிரபலமானார். அதன் பின் வந்த காக்க முட்டை, இவரின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்ந்து வித்தியாசமான கதை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில், ட்ரைவர் ஜமூனா மற்றும் தி க்ரேட் இந்தியன் கிட்சனில் நடித்த இவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. 

சமூக வலைதளத்தில் சற்று ஆக்டீவாக இருக்கும் இவரின், ட்விட்டர் பக்கத்தை மீட்கும் பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது.

நடிகர் ஜெய் மற்றும் நெடுஞ்சாலை புகழ் சிவாதாவுடன் இணைந்து, "தீராக் காதல்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...