அஜித்துக்கு வில்லனாக நடிக்க டாக்டர் பணியை கைவிட்ட நடிகர்!

1 year ago 358

தமிழ் சினிமாவில் அப்படி நிறைய கலைஞர்கள் வேறொரு துறையில் இருந்து வந்து படங்களில் நடித்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். 

ரசிகர்களை மிகப்பெரிய ஆச்சரியத்திற்குள் தள்ளியவர் தான் நடிகை சாய் பல்லவி. பிரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சாய் பல்லவி, உண்மையில் ஒரு மருத்துவர். 

மருத்துவராக இருந்து கொண்டு நடனத்திலும், நடிப்பிலும் சிறந்து விளங்கிய இவர், தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?

அந்த வரிசையில் 2009 ஆம் ஆண்டு வெளியான உலக நாயகன் கமலஹாசன் நடித்த உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் போலீஸ் ஆக நடித்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பரத் ரெட்டி.

இவர் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இதய மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். நடிகர் அஜித்குமார் மற்றும் நயன்தாரா நடித்த விசுவாசம் திரைப்படத்தில் வில்லனின் மகளுக்கு விளையாட்டு சொல்லித் தரும் கோச்சாக இவர் நடித்திருப்பார். 


அதேபோன்று இது கதிர்வேலன் காதல் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் பரத் ரெட்டி. முதலில் தெலுங்கில் அறிமுகமாகிய இவர், தற்போது தமிழ் சினிமாவிலும் முன்னணி நடிகராக இருக்கிறார்.

மருத்துவத்திலும் சிறந்தவராக இருந்து கொண்டு நடிப்பிலும் பட்டையை கிளப்பி வருகிறார் நடிகர் பரத் ரெட்டி. இவரைப் போன்றே தமிழ் சினிமாவில் நிறைய பேர் யாரும் எதிர்பார்க்காத தொழிலை செய்தவர்களாக இருக்கிறார்கள். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...