Varisu Trailer: வாரிசு ட்ரெய்லர்.. ஆட்டநாயகன் விஜய்!

2 years ago 17

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. 

தில் ராஜு தயாரிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பு, ஷாம், யோகி பாபு, சதீஷ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

வாரிசு ட்ரெய்லர் ரிலீஸ்

தோழா, மகரிஷி படங்களை இயக்கி அசத்திய இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா நடிப்பில் தமன் இசையில் உருவாகி உள்ள வாரிசு படத்தின் அட்டகாசமான ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. 2 நிமிடங்களுக்கு மேல் ஓடக் கூடிய இந்த ட்ரெய்லரில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிகர் விஜய் செம ஹேண்ட்ஸம்மாகவும் சூப்பர் கூலாகவும் வருகிறார்.

தெறிக்கும் ஆக்‌ஷன் 

வாரிசு படம் சென்டிமென்ட் கலந்த குடும்ப படமாக இருந்தாலும் ஆக்‌ஷனில் கொஞ்சமும் ரசிகர்களுக்கு குறை வைக்காத வகையில் அதிரடியில் கலக்கி உள்ளார் 'தீ தளபதி' இந்த பொங்கல் வாரிசு பொங்கல் தான் என விஜய் ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு செம ஆக்‌ஷன் மற்றும் எமோஷனல் எண்டர்டெயினராக வாரிசு படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எகிறும் எமோஷனல் 

Soul of Varisu பாடல் உலகளவில் பில் போர்ட் பட்டியலிலேயே முதலிடத்தை பிடித்த நிலையில், படத்தின் மையக் கருவாகவும் அந்த பாடல் அமைந்துள்ளது. வாரிசு என டைட்டில் வைக்கப்பட்ட நிலையில், எமோஷன் காட்சிகளில் அதிகளவில் நடிகர் விஜய் இந்த படத்தின் மூலம் தனது ரசிகர்களை உருக வைப்பது கன்ஃபார்ம் என்பதும் தெளிவாகி உள்ளது.

தியேட்டரில் கொண்டாட்டம் 

சென்னை ரோகிணி தியேட்டரில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள பல திரையரங்குகளில் வாரிசு படத்தின் ட்ரெய்லர் கொண்டாட்டத்திற்காக பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாரிசு ட்ரெய்லரை ரசிகர்கள் தியேட்டரில் பார்த்து வேறலெவல் வெறித்தனமாக கொண்டாடி உள்ளனர். ரசிகர்கள் படை என்றால் அது இதுதான் என விஜய் ரசிகர்கள் அந்த வீடியோ காட்சிகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

துணிவு சாதனையை முறியடிக்குமா

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு படத்தின் ட்ரெய்லர் கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியானது. 24 மணி நேரத்தில் 30 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை படைத்துள்ள நிலையில், துணிவு படத்தின் சாதனையை வாரிசு ட்ரெய்லர் முறியடிக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்..

கடைக்குட்டி சிங்கம் 

வாரிசு ட்ரெய்லரிலேயே கதையை தெளிவாக சொல்லி விட்டார் இயக்குநர் வம்சி. சரத்குமாரின் முதல் மகன் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் இரண்டாவது மகன் ஷாம் மூன்றாவது கடைக்குட்டி சிங்கமாக விஜய் இந்த படத்தில் நடித்துள்ளார். 

வாழ்க்கையை ஜாலியாக செலவழித்து வரும் நடிகர் விஜய் அப்பாவின் பிசினஸ்க்கு வரும் பிரச்சனையை எப்படி சமாளிக்கிறார் என்பதும் வீட்டை விட்டு பிரிந்து செல்லும் அண்ணன்களை மீண்டும் எப்படி குடும்பத்துடன் இணைக்கிறார் என்பதும் தான் வாரிசு படத்தின் கதை என தெளிவாக தெரிகிறது.

பிரகாஷ் ராஜ் வில்லன் 

வாரிசு படத்தில் வில்லனாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். சரத்குமாரின் பிசினஸ்க்கு சவால் விடும் ரோலில் இந்த சீட்டின் ஹீட் என்னன்னு தெரியுமா என விஜய்யின் மூத்த அண்ணனிடம் பஞ்ச் பேசுகிறார். பவர் சீட்ல இல்லை சார், அந்த சீட்ல யார் உட்கார்ந்து இருக்கா என்பதை பொறுத்துத் தான் இருக்கு என்றும் கிரவுண்ட் ஃபுல்லா உன் ஆளு இருந்தாலும் ஆட்ட நாயகனை தான் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்றும் அடுக்கடுக்கான பஞ்ச் பேசி நடித்துள்ளார் விஜய்.

எல்லாமே இருக்கு 

வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் தில் ராஜு சொன்னது போல ராஷ்மிகாவுடன் காதல், யோகி பாபுவுடன் காமெடி, எல்லா பாடலுக்கும் நடனம், அதிரடி ஆக்‌ஷன், வில்லனுக்கு செக்மேட் வைக்கும் காட்சிகள், அம்மா அப்பாவுடன் பாசம் என கலந்து கட்டி பக்கா பேக்கேஜ் ஆக இயக்குநர் வம்சி இந்த படத்தை கொடுத்துள்ளார் என தெரிகிறது

Read Entire Article