இணையத்தை கலக்கும் கலாட்டா கல்யாணம் படத்தின் சக்களத்தி பாடல்

3 years ago 14

ராஞ்சனா படத்தின் மூலம் தனுஷை இந்தியில் அறிமுகப்படுத்தியவர் ஆனந்த் எல்.ராய். அவரது இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம்தான் அத்ரங்கி ரே.  

உடன் சாரா அலிகான், அக்ஷய் குமார் நடித்திருக்கிறார்கள். இசை ஏ.ஆர்.ரஹ்மான். டி சீரிஸ், கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ், கேப் ஆஃப் காட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன.

இந்த திரைப்படம் தமிழில் கலாட்டா கல்யாணம் எனும் தலைப்பில் வெளியாகவுள்ளது. 1968 இல் சிவாஜி கணேசனும், ஜெயலலிதாவும் கலாட்டா கல்யாணம் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். 

அதே பெயரை இப்போது தனுஷ் படத்துக்கு தேர்வு செய்துள்ளனர். இத்திரைப்படத்தில் உள்ள சக்களத்தி பாடல் கடந்த மாதம் 29ம் தேதி வெளியான நிலையில் தற்போது யூடியூப், ட்விட்டர் என இணையதளங்களில் இப்பாடல் வைரலாகி உள்ளது.

இந்த திரைப்படம் டிசம்பர் 24ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது. தற்போது சக்களத்தி பாடல் குறித்த மீம்ஸ்கள் இணையத்தில் வலம் வருகின்றது. 

நடிகர் அஜித் குமார் மனைவியான ஷாலினி அலைபாயுதே படத்தில் நடித்த யாரோ யாரோடு பாடலுக்கு பிறகு தமிழில் திருமண பாடல் ஒன்று வைரலாகி வருவதாக இரண்டு பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசை எனவும் இணையத்தில் மீம்ஸ் போட்டுள்ளனர் .

பலரும் சக்களத்தி பாடலுக்கு நடனம் ஆடி அந்த வீடியோவை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

Read Entire Article