இணையத்தை தெறிக்க விடும் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வீடியோ இதோ.!

3 years ago 18

தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக தர்பார் என்ற திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் படத்தில் குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என பல நடிகர் நடிகைகள் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரஜினிக்கு வில்லனாக சிறுத்தை சிவாவின் தம்பி பாலா நடித்துள்ளார். இவர் ஏற்கனவே வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்தப் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் நேற்று வெளியானது.

எஸ்பிபி குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

Read Entire Article