உருமாறிப்போன பிரேமம் இயக்குனர்.. 7 வருடம் முடங்கிக் கிடந்த சோகம்

2 years ago 266

நேரம் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அல்போன்ஸ் புத்திரன் பிரேமம் என்ற ஒரு திரைப்படத்தால் முன்னணி இயக்குனர் பட்டியலில் இணைந்தார். 

நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த அந்த திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இன்றும் கூட ரசிகர்கள் சாய் பல்லவியை மலர் டீச்சர் என்று தான் கூப்பிடுகின்றனர்.

அந்த அளவுக்கு அந்த திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து அல்போன்ஸ் புத்திரன் அவியல் என்ற ஆந்தாலஜி படத்தை இயக்கியிருந்தார். அதைத்தொடர்ந்து அவர் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. 


பல வருடங்களாக அவரின் அடுத்த பட அறிவிப்புக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

அந்த வகையில் பிரேமம் திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து அல்போன்ஸ் புத்திரன் கோல்ட் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். 

பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சில நாட்களாகவே அல்போன்ஸ் புத்திரன் பற்றிய செய்தி தான் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. 

அதாவது அவருடைய தற்போதைய புகைப்படம் ஒன்று பலருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இருக்கிறது. அதில் அவர் எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போய் இருக்கிறார்.

இந்த அளவுக்கு அவர் உடல் எடை குறைந்து உருமாறி போனதற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அவருக்கு உடம்பில் ஏதாவது பெரிய பிரச்சனை இருக்கிறதா என்றும் ரசிகர்கள் கவலையுடன் கேட்டு வருகின்றனர். 

உண்மையில் இந்த ஏழு ஆண்டுகளாக அல்போன்ஸ் புத்திரன் படம் இயக்காமல் முடங்கி கிடந்ததற்கு என்ன காரணம் என்று தெரியவந்துள்ளது.

அதாவது அவர் பிரேமம் திரைப்படத்தின் வெளியீட்டு சமயத்திலேயே சில உடல் நல பிரச்சனையால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். அதை தொடர்ந்து அவருக்கு ஒரு கொடிய நோய் இருந்ததாகவும் அதன் பாதிப்பிலிருந்து இப்போதுதான் அவர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்துள்ளார் என்றும் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. இருப்பினும் இந்த செய்தி உண்மையா என்று தெரியவில்லை. 

ரசிகர்கள் கவலையுடன் கேட்டு வரும் இந்த கேள்விக்கு அல்போன்ஸ் புத்திரன் விரைவில் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...