மாரடைப்பால் மரணமடைந்த பிரபல நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

2 years ago 337

மேற்கு வங்கத்தை சேர்ந்த ஐன்டிரிலா சர்மா பெங்காலி மொழியில் பிரபல நடிகை ஆவார். இவருக்கு சில முறை நெஞ்சு வலி பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டிருக்கிறார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இவருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மதியம் 1 மணியளவில் அவர் உயிரிழந்தார். 24 வயதில் ஐன்டிரிலா உயிரிழந்திருப்பது திரையுலகில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், சமூக வலைதள பக்கத்தில் ஐன்டிரிலா சர்மா ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக ஐன்டிரிலா சர்மா கடந்த மாதம் மூளை பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றுவந்துள்ளார். பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்த கசிவு அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...