பிரபல நடிகை ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை.. வீடியோ வெளியிட்டு எடுத்த விபரீத முடிவு

1 year ago 319

Akanksha Dubey Suicide: நடிகை அகன்ஷா துபே தற்கொலை

உத்தரபிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தின் சௌரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிர்சாபூரில் 1997 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி பிறந்த அகன்ஷா, சிறு வயதிலிருந்தே நடனம் மற்றும் நடிப்பு மீது விருப்பமுள்ளவராக இருந்துள்ளார். 

தனது நடனம் மற்றும் நடிப்பு திறமையை TikTok மற்றும் Instagram செயலிகள் மூலம் வெளிக்காட்டிய அவர் ரசிகர்களிடம் பிரபலமானார். இந்தியாவில் டிக்டாக் தடைசெய்யப்பட்டபோது தான், அகன்ஷாவின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக தொடங்கியது.

அதன் வழியாக அவருக்கு போஜ்புரி படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.மேரி ஜங் மேரா ஃபைஸ்லா என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவருக்கு “வீரோன் கே வீர்' மற்றும் கசம் பத்னா கே வாலே கி 2” ஆகிய படங்களின் வெற்றி நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. 

இதனிடையே போஜ்புரி படமான லயாக் ஹூன் மெயின் நலயக் நஹி படத்திற்காக புத்த சிட்டி காலனியில் அமைந்துள்ள சுமேந்திரா ஹோட்டலில் அகன்ஷா துபே தங்கியிருந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்குச் சென்ற அவர் ஞாயிற்றுக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். வழக்கம்போல காலை மேக்கப் மேன் அகன்ஷாவுக்கு போன் செய்துள்ளார். போனை யாரும் எடுக்காத நிலையில் அவர் நேரடியாக ஹோட்டலுக்கு வந்து விசாரித்துள்ளார். 

அப்போது அகன்ஷா தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை என்றும், அவர் உணவு கூட ஆர்டர் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த மேக்கப் மேன் ஹோட்டல் ஊழியர்கள் உதவியுடன் கதவை தட்டிப் பார்த்தும் எந்த வித பதிலும் வரவில்லை.

இதன்பின்னர் போலீசாரை வரவழைத்து அவர்கள் முன்னிலையில் ஹோட்டல் மேனேஜர் மாற்றுச் சாவி மூலம் கதவை திறந்து பார்த்தப்போது அதிர்ச்சி காத்திருந்தது. 

அங்கு சேலையைக் கொண்டு மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக அகன்ஷா துபே மீட்கப்பட்டார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் அறையில் இருந்த மொபைல் போனை கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அதேசமயம் ஹோட்டல் மேனேஜர் ரித்தேஷ் குமார் போலீசார் விசாரணையில் பல தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது அகன்ஷா துபே தங்கியிருந்த அறையில் மதுபாட்டில்கள்,சிகரெட்டுகள் இருந்ததாகவும், அந்த அறைக்கு வந்த இளைஞர் ஒருவர் சுமார் 20 நிமிடங்கள் இருந்ததாகவும் கூறியுள்ளார்.


இதற்கிடையில் தற்கொலை செய்வதற்கு முன் இன்ஸ்டாகிராம் செயலியில் நேரலையில் வந்த அகன்ஷா, கதறி அழுதுள்ளார். மேலும் ஹிலோர் மேரே என்ற போஜ்புரி பாடலுக்கு கண்ணாடி முன் பெல்லி டான்ஸ் ஆடிய வீடியோ பகிர்ந்துள்ளார். 

மேலும் காதலர் தினத்தன்று சக நடிகரான சமர்சிங்கின் புகைப்படத்தை பதிவிட்டு காதலர் தின வாழ்த்துக்களோடு தன்னுடைய காதலையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு அகன்ஷா துபே நடித்த யே ஆரா கபி ஹரா நஹி என்ற போஜ்புரி பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் அகன்ஷாவின் மறைவு செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள்சோகத்தில் ஆழ்ந்தனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...