பழையபடி நடக்க ஆரம்பித்துள்ள நடிகை... நடைப்பயிற்சியில் பூஜா ஹெக்டே!

2 years ago 235

முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. 

கடைசியாக தமிழில் தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருந்தார். 

பூஜா ஹெக்டே ஹிந்தியில் ரன்வீர் சிங் இரட்டை வேடங்களில் நடிக்கும் சர்க்கஸ் படத்திலும் சல்மான் கானின் கிசி கா பாய் கிசி கி ஜான் படத்திலும் தற்போது கதாநாயகியாக நடித்து வருகிறார். 


இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு காலில் காயம் ஏற்பட்டு தசை நார் கிழிந்ததால் மிகுந்த அவதிப்பட்டு வந்த நடிகை பூஜா ஹெக்டே அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். 

தற்போது சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு மீண்டும் பழையபடி நடக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் காலில் கட்டோடு நடைப்பயிற்சி செய்யும் வீடியோவை தனது Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...