மலையாளத் திரையுலகில் முண்ணனி நடிகராக இருந்தவர் நடிகர் இன்னசென்ட் . இவருக்கு வயது 75. இவர் கொச்சியில் உள்ள விபிஎஸ் லேக்ஷோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் புற்றுநோயால் கடும் அவதிப்பட்டு வந்தார். இதனால் ஏற்பட்ட உடல் உபாதைகள் காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு இன்னசென்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சுமார் 750 படங்களில் நடித்த இன்னசென்ட், 1972ம் ஆண்டு 'நிருதாசாலா' படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார். சாலக்குடி எம்.பி.யாகவும், திரைப்பட நடிகர் சங்கமான அம்மாவின் தலைவராக நீண்ட காலம் பணிபுரிந்தவர்.
அவர் புற்றுநோயை எதிர்த்துப் போராடிக் கொண்டே வழக்கமான பணிகளை தொடர்ந்தார். 2022 ல் வெளியான 'மகள்' மற்றும் 'கடுவா' போன்ற மலையாளப் படங்களில் அவரின் நடிப்பு பெரும் வரவேற்பு பெற்றது. அகில் சத்யன் இயக்கத்தில் ஃபஹத் பாசில் நடித்த 'பாசுவும் அற்புதவிளக்கும்' படத்திலும் கடைசியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உடற்பயிற்சியின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது முதல் திரையுலகில் அடுத்தடுத்த மரணங்களை திரையுலகை கலங்கடித்து வருகின்றன.
மூத்த கலைஞர்கள் , இளம் வயதினர் என்ற வயது வித்தியாசம் இன்றி திடீர் உயிரிழப்புக்கள், மரணங்கள் ஏற்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்தி வருகின்றன.
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இத்தகைய அசாதாரண திடீர் மரணங்கள் ஏற்பட்டு வருவது திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
1972-ல் வெளியான 'நிர்தசாலா' படித்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் இன்னொசென்ட்டின். அதனைத் தொடர்ந்து 750-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி, குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தமிழில் 'லேசா லேசா' படத்தின் மூலம் அறிமுகமான இவர், நான் அவளை சந்தித்தபோது உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.சிறந்த நடிகருக்கான கேரள மாநில அரசு விருதுகளைப் பெற்றுள்ள இன்னொசென்ட், மலையாள நடிகர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இன்னொசென்ட் கடந்த 2012-ம் ஆண்டு தொண்டை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இன்னொசென்ட் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு மீண்டும் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.