சினிமா என்றாலே பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கு சினிமாவையே ஒரு செய்தி உலுக்கி வருகிறது.
தெலுங்கில் உப்பென்னா படத்தில் அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. இவர் தற்போது ராம்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
அப்படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார், இப்படத்தில் ஒரு காட்சியில் கீர்த்தி ஷெட்டி மிகவும் கண்ணீர் விட்டு அழுது உணர்வுப்பூர்வமாக நடிக்க வேண்டுமாம்.
ஆனால், அவர் அதிக டேக் வாங்க, லிங்குசாமி கடுமையாக திட்டி விட்டார், அதனால் கீர்த்தி மிகவும் மனம் நொந்து போனதாக தெலுங்கு மீடியாக்கள் கிசுகிசுக்கின்றது.