தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். அது சீசன் முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரில் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் போட்டியாளர்களில் ஒருவராக அனிதா சம்பத் பங்கேற்றுள்ளார். இவர் தமிழ் செல்வி மற்றும் ஜூலி ஆகிய மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது பிக்பாஸில் எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு அவருடைய லிட்டில் பாஸ் என்னோட வயித்துல வளருது என அனிதா சம்பத் கூறுகிறார்.
இதனைக் கேட்டதும் ஜூலி மற்றும் தாமரைச்செல்வி சத்தம்போட்டு கிண்டல் அடிக்கின்றனர். அனிதா சம்பத் இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் அனிதாவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.