ஒருநாள்கூட இல்லை - பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாச்சனா.. விஜய் சேதுபதி ரியாக்‌ஷன் என்ன?

3 months ago 53

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதால் இந்த சீசன் மீது மேலும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். இந்த முறை பலருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக 24 மணிநேரத்திலேயே எவிக்ட் என்ற ரூலை கொண்டுவந்திருக்கிறார் பிக்பாஸ்.

இந்த சீசனில் போட்டியாளர்களாக தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகர், இயக்குநர் ரஞ்சித், சீரியல் நடிகர் அர்னவ், அருண் பிரசாந்த், நடிகர் தீபக், ஜெஃப்ரி, நடிகர் விஜே விஷால், முத்துக்குமரன், தொகுப்பாளினி ஜாக்குலின், நடிகை பவித்ரா ஜனனி, மகாராஜாவில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனா, நடிகை சுனிதா, நடிகை அன்ஷிதா, தர்ஷா குப்தா, சௌந்தர்யா, ஆனந்தி, சத்யா, தர்ஷிகா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

தொடக்க நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக தயாரிப்பாளர் ரவீந்தர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அதனையடுத்து மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்து பிரபலமான சாச்சனா உள்ளே சென்றார். 21 வயதாகும் அவருக்கு கண்டிப்பாக பிக்பாஸ் நல்ல பிளாட்பார்மாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்இடையே வீட்டின் நுழைவிலேயே நடுவில் ஒரு கோடு போடப்பட்டிருக்கிறது. அதேபோல் போட்டியாளர்கள் மூன்று பேராக படுக்கும்படி மெத்தை போட்டு ஒரு படுக்கையறையும், தனித்தனியாக படுக்கும்படி மெத்தைகள் போட்டு ஒரு படுக்கையறை என மொத்தம் இரண்டு பெட்ரூம்கள் இருக்கின்றன. 

மேலும் எப்போதும் இல்லாத மாதிரி இந்த முறை முதல் நாள் எவிக்‌ஷெனை கொண்டு வந்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் பிக்பாஸ். எனவே முதல் நாளில் யார் சிக்கப்போகிறார் என்ற ஆவல் ரசிகர்களிடம் இருந்தது.

இந்நிலையில் வெளியான பிக்பாஸ் ப்ரோமோவில், முதல் நாள் எவிக்‌ஷெனில் சிக்கி வீட்டிலிருந்து வெளியேறுகிறார் சாச்சனா. தான் எவிக்‌ஷென் ஆனதை அடுத்து உச்சக்கட்ட விரக்திக்கு சென்ற சாச்சனா முதல் நாளிலேயே வெளியேறுகிறோமே என்ற கோபத்திலும், சோகத்திலும் கையில் வைத்திருந்த பிக்பாஸ் போலி ட்ராஃபியை போட்டு உடைத்தார். 

முதல் நாளே 21 வயதான சாச்சனா வெளியேறியிருப்பது ரசிகர்களுக்கும்கொஞ்சம் அப்செட்டைத்தான் கொடுத்திருக்கிறது. விஜய் சேதுபதி இந்த வார இறுதியில் என்ன பேசுகிறார்; என்ன ரியாக்‌ஷன் கொடுக்கிறார் என்பதை பார்க்கலாம்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...