வெளியே போன போட்டியாளர் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட்டில்.? இது அக்கிரமமா இருக்கே!

2 years ago 690

பிக் பாஸ் சீசன் 5க்கு பிறகு தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 30-ஆம் தேதி துவங்கிய இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் துவங்கியது. 

போட்டியாளர்கள் அனைவரும் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என்ற காரணத்தால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகள் அவர்கள் மிகவும் கவனமாக விளையாடி வருகின்றனர். 

இதனைத் தொடர்ந்து வனிதா விஜயகுமார், நிரூப், ஜூலி, அபிராமி, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, தாமரைச்செல்வி, அனிதா சம்பத், சினேகன் மற்றும் ஸ்ருதி பெரியசாமி ஆகியோர் தற்போது வீட்டில் இருகின்றனர். 

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கமல் அறிவித்ததனை தொடர்ந்து அடுத்ததாக இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். 

இந்த நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அடுத்ததாக வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே செல்ல போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை எந்த எபிசோடிலும் கலந்து கொள்ளாத கே.பி.ஒய் சதீஷ் மற்றும் ஏற்கனவே போட்டியாளராக இருந்து வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி இருவரும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று தற்போது கூறப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...