கண்டித்த கமல் ஹாசன்... பிக்பாஸிடம் கதறி அழுத தனலட்சுமி!

2 years ago 279

பிக்பாஸ் தமிழ் சீசன் 06 இன்றைய அப்டேட்

முறைகேடாக விளையாடியதாக கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று தனலட்சுமியை கடுமையாக கண்டித்தார். இதனை அடுத்து அவரிடமிருந்த வெற்றியை பிடுங்கி விக்ரமனுக்கு கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வெளியான வீடியோவில் தனலட்சுமி கன்ஃபெக்சன் அறையில் பிக்பாஸ் முன் கதறி அழும் காட்சி உள்ளது.

அதில் ’நான் ரொம்ப கனவுகளோடு இங்கே வந்தேன். ஆனால் இங்கே வந்து நானே என்னை அசிங்கப்படுத்தி கொண்டேன். என்னால் வெளியில் சொல்ல முடியாத அவமானம் ஏற்பட்டது. எனக்கு ரொம்ப அவமானமாக உள்ளது.

ஒரு சின்ன விஷயம் இவ்வளவு பெரிதாக வெடிக்கும் என்று எனக்கு தெரியாது. நான் நியாயமாக விளையாடிக் கொண்டிருக்கின்றேன், சரியாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று தான் இவ்வளவு நாள் நினைத்துக்கொண்டிருந்தேன். 

அவ்வளவு கஷ்டப்பட்டு நான் இந்த இடத்திற்கு வந்தேன். என் மேல் திருட்டு பட்டம் வந்து விட்டது, நான் திருடியா? என்று அவர் கதறி அழுத காட்சியுடன் புரமோ முடிவுக்கு வருகிறது.


#Day36 #Promo3 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/QVuORa6kWF

— Vijay Television (@vijaytelevision) November 14, 2022
NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...