முதல் நாளே நடந்த எலிமினேஷன்... உடைந்து அழுத ரஞ்சித்; நடந்தது என்ன?

3 months ago 135

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன், அக்டோபர் 6-ந் தேதி தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே எலிமினேட் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் தொடங்கி 24 மணி நேரத்திற்குள் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளது, பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறை என்பதால், சமூகவலைதளங்களில் இந்த நடவடிக்கைக்கு பெரும் விமர்சனங்களும் குவிந்து வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன், கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. கடந்த 7 சீசன்களை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 

இதனிடையே, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன், முதல் நாளில், இருந்தே இந்த நிகழ்ச்சி சுவாரஸ்யத்தின் உச்சமாக தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் இருக்கும்போது எதிர்பாரததை எதிர்பாருங்கள் என்று சொல்வார். அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார்.

கடந்த சீசனை தற்போதும் 2 வீடுகள் இருக்கிறது. ஒரு வீட்டில் அனைத்து வசதிகளும் மற்றொரு வீட்டில் வசதி குறைவாகவும் இருக்கிறது. இதில் முழு வசதி இருக்கும் வீட்டில் நாங்கள் இருக்கிறோம் என்று பெண் போட்டியாளர்கள் சொல்ல, அதற்கு ஆண் போட்டியளர்கள், எங்களை நாமினேஷன் செய்யாமல் இருந்தால் இதற்கு நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். அதற்கு பெண் போட்டியாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முதலில் ஒப்புக்கொண்டவர் போட்டியளர் சாச்சனா. ஆனால் அவரே முதல் போட்டியாளராக முதல்நாள் முடிவடைவதற்குள் வெளியேறியுள்ளார். நானே முதல் போட்டியாளராக வெளியேறுகிறேன் என்று அவர் கூறியதை தொடர்ந்து, அனைவரும் அவரை நாமினேஷன் செய்தனர். 

அதன்படி சாச்சனா வெளியேற்றப்பட்ட நிலையில், போட்டியாளர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்நத்னர். அதிலும் குறிப்பாக நடிகர் ரஞ்சித் சாச்சனா எலிமினேட் ஆனதற்கு, கண்ணீர் விட்டு அழுதுள்ளார். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...