அமீர்கானுடன் திருமணமா.? உண்மையை உடைத்த நடிகை.!

3 years ago 558

பாலிவுட்டின் முக்கிய நடிகராக இருப்பவர் அமீர் கான். இதற்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் அமீர்கான் மற்றும் அவரது இரண்டாவது மனைவி இருவரும் சேர்ந்து விவாகரத்து செய்யப்போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். 

இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது. இதனை தொடர்ந்து, டங்கல் படத்தில் அவருக்கு மகளாக நடித்த பாத்திமா சனா ஷேக் அமீர்கானை திருமணம் செய்யப்போவதாகவும், இதனால்தான் அமீர்கான் விவகரத்து செய்தார் என்றும், அந்த படத்திற்கு பின், பாத்திமா சனா ஷேக்கும், அமீர்கானும் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். என்றும் செய்திகள் பரவியது. 

இந்த செய்திகள் இந்திய திரையுலகில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இதுகுறித்து நடிகை பாத்திமா சனா ஷேக், முன்பெல்லாம் இந்த மாதிரி வதந்திகளை பார்க்கும் பொழுது, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். தாங்கிக்கொள்ளவே முடியாது. ஆனால், தற்போது அப்படி எல்லாம் இல்லை. 

அளவுக்கு அதிகமாக வதந்திகள் பரவுவதை பார்த்து பார்த்து சலித்துப் போய்விட்டது. எதையுமே பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டால் அது தானாகவே அடங்கிவிடும்." என்று கூறி வதந்திகளை நீர்த்துப்போக செய்துள்ளார்.  


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...