சம்பளம் எனக்கு முக்கியமில்லை - நடிகை கரீனா கபூர்

6 months ago 76

பாலிவுட் நடிகர்களில் மிக முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவர் கரீனா கபூர். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். 

இவர் கடைசியாக 'க்ரூ' என்ற படத்தில் நடித்தார். இதில் தபு, கபில் சர்மா மற்றும் கிருத்தி சனோன் ஆகியோருடன் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், தனது 20 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையைப் பற்றி பேசியுள்ளார். 

அதில், தான் எப்போதும் படத்தின் தரம் மற்றும் கதாபாத்திரத்தின் மீதான ஆர்வம் ஆகியவற்றிற்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாக கூறினார். 

தான் எப்போதும் சம்பளத்தில் கவனம் செலுத்துவதில்லை என்று கூறினார். தனக்கு சம்பளத்தை விட தனிப்பட்ட திருப்தி மற்றும் கதாபாத்திரத்தின் தரம் ஆகியவை முக்கியம் என குறிப்பிட்டார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...