திருமணமாகாமல் 50 வயது நடிகை கர்ப்பம்?

2 years ago 416

நடிகை மலைக்கா அரோராவும் போனி கபூர் முதல் மனைவியின் மகனும் நடிகருமான அர்ஜுன் கபூரும் ஒருவரையொருவர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. 

மேலும், அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வரும் இந்த ஜோடிகளுக்கு முதல் குழந்தை பிறக்க போகிறது என்ற செய்தி இணையத்தில் தீயாக பரவியது.

இதனை தொடர்ந்து, இந்த செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டைகளை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டு நடிகர் அர்ஜுன், “இது வெறும் போலியான செய்திகள், இப்போதுள்ள செய்தியாளர்கள் இதுபோன்ற போலி வதந்திகள்ளை தவறாமல் எழுதி அதிலிருந்து தப்பித்து வருகிறார்கள். 

ஏனெனில் இந்த போலி வதந்திகள் ஊடகங்களில் பரவி உண்மையாக மாறும் போது நாம் புறக்கணிக்க முனைகிறோம், எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையோடு விளையாடத் துணியாதீர்கள்” என்று  தக்க பதிலடி கொடுத்து வதந்திகளை மூடி மறைத்தார்.

இதற்கிடையில், அர்ஜுன் கபூர் விளக்கத்தை தொடர்ந்து, தனது கர்ப்ப வதந்திகளுக்கு பதிலளித்த மலைக்கா அரோராவும் இந்த செய்தி ‘அருவருப்பானது’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

நடிகை மலைக்கா அரோரா மற்றும் அர்ஜுன் கபூர் ஆகியோர் சரியான நேரம் எதுவென தெரிந்தவுடன் தங்கள் திருமணத் தேதி குறித்து அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...