நான் பொது சொத்து கிடையாது- காட்டமாகப் பேசிய டாப்ஸி

4 months ago 189

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையான டாப்ஸி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விக்ரம் மாஸியுடன் இவர் இணைந்து நடித்து மாஸ் வரவேற்பைப் பெற்ற 'ஹசீன் தில்ரூபா'வின் இரண்டாம் பாகமான 'பிர் ஆயி ஹசீன் தில்ரூபா' நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. 

முதல் பாகத்தை கனிகா தில்லோன் எழுதி, வினி மேத்யூ இயக்கியிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தையும் கனிகா தில்லோன் எழுதி, ஜெய்பிரத் தேசாய் இயக்கியிருக்கிறார்.


கடந்த ஆக்ஸ்ட் 9-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி பாசிட்டிவான விமர்சனத்தைப் பெற்றது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் Paparazzi (புகைப்படக் கலைஞர்கள்) குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. 

டாப்ஸி பலமுறை Paparazzi-களுடன் மோதலில் ஈடுபட்டிருக்கிறார். அவர்களுடனான வாக்குவாதத்தால், அவர் பலமுறை ட்ரோலும் செய்யப்பட்டிருக்கிறார்.

அதனால் Paparazzi-கள் குறித்து தற்போது காட்டமாகவே பதிலளித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், "நான் பிரபலமான ஒரு நபர்தானே தவிர, மற்றவர்களின் பயன்பாட்டிற்குறிய பொது சொத்தல்ல. ‘No Means No’ என்பது அனைத்து பெண்களுக்கும் பொருந்துவது போல தொழில்முறை பெண் கலைஞர்களுக்கும் நடிகைகளுக்கும் பொருந்தும்" என்றார்.

"நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். நான் ஒரு பொது நபர், பொது சொத்து அல்ல. இந்த இரண்டு விஷயங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எனக்கு மரியாதை கொடுத்தால் நானும் மரியாதை கொடுப்பேன்" என்றும் கூறியிருக்கிறார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...