ஆடையில்லாமல் இருப்பதே ... தனது நிர்வாண புகைப்படத்திற்கு பிரபல நடிகர் கொடுத்த பதில்

3 years ago 692

நடிகரும், மாடலுமான மிலிந் சோமன் கடந்த நவம்பர் 4 அன்று அவரது பிறந்த நாளன்று கடற்கரையில் ஆடை ஏதும் அணியாமல் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டார். 

அப்போது அந்த காட்சியை புகைப்படமாக எடுத்திருந்தார் அவரது மனைவி அங்கிதா கொன்வார். அந்த படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் மிலந். அது சர்ச்சையாகவும் எழுந்திருந்தது.

இந்நிலையில் அந்த சர்ச்சை புகைப்படத்தை குறிப்பிட்டு “அது இந்திய கலாச்சாரம்” என கருத்து சொல்லியுள்ளார் மிலிந். 

இதுகுறித்து மிலின் சோமன் கூறுகையில், “இந்திய கலாச்சாரம் மிகவும் மாறுபட்டது. பரந்ததும் கூட. இந்தியா முழுவதும் நான் பயணங்களை மேற்கொண்டுள்ளேன். 

அந்த பயணத்தின் போது அந்தந்த பகுதியின் மக்களுடன் நான் பேசியும், பழகியும் உள்ளேன். சமயங்களில் அவர்களுள் ஒருவனாகவே மாறிவிடுவேன். அதனால் இது தான் இந்திய கலாச்சாரம் என வரையறுத்துவிட முடியாது” என்றார்.

மேலும், ”இங்கு பிரச்சனை என்னவென்றால் தங்களது வீடும், அந்த வீட்டில் உள்ளவர்களும் என்ன செய்தாலும் அது இந்திய கலாச்சாரம். 

அதுவே அடுத்தவர்கள் வீட்டில் என்றால் அது அமெரிக்க கலாச்சாரம். அப்படி எண்ணுபவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். அமெரிக்காவில் ஆடை இல்லாமல் திரிவது சட்ட விரோதம். 

ஆனால் இந்தியாவில் பல இடங்களில் அப்படி இல்லை. அதனால் தான் நான் சொல்கிறேன் அது இந்திய கலாச்சாரம் என்று. அந்த படத்தில் சிக்கல் இருந்திருந்தால் இன்ஸ்டாவே அதை நீக்கியிருக்குமே. அதுவும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது தான்” என மிலின்  தெரிவித்துள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...