இந்த குழந்தை யாரு தெரியுமா..? இப்போ பெரிய நடிகை!

3 years ago 259

பிரபல இளம் முன்னணி நடிகையின் சிறுவயது புகைப்படம் ஒன்று இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

2000ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பைய்லட் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் இப்பொழுது தென்னிந்தியாவிலேயே அனைவரும் வியந்து பார்க்கும் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக உள்ளார்.


நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். இவர் மோகன்லால் நடித்த கீதாஞ்சலி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

சிவகார்த்திகேயன், சூர்யா, விக்ரம்,விஜய் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இப்பொழுது சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்டு அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். 

குழந்தை பருவத்தில் அப்பா சுரேஷ்குமாருடன் எடுத்துக்கொண்ட க்யூட்டான புகைப்படம் இப்போது வைரல் ஆகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...