இந்த வாரம் நாமினேஷனில் பிரியங்காவிற்கு குறியா?

3 years ago 442

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேசன் படலம் நடைபெறும் என்பதும் அதில் அந்த வார இறுதியில் வெளியேற்றப்படும் போட்டியாளர்களுக்கான நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் தெரிந்ததே. 

இந்த நிலையில் இந்த வார நாமினேஷன் குறித்த முதலாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் இந்த வாரம் நாமினேஷன் பிராசஸ் தொடங்கலாம் என பிக்பாஸ் அறிவித்தவுடன் முதலாவதாக பிரியங்கா, சின்ன பொண்ணு மற்றும் அக்ஷராவை நாமினேட் செய்கிறார். 

ஏற்கனவே அக்சரா மீது அவருக்கு கருத்து வேறுபாடு இருப்பதால் அவரை நாமினேட் நிலையில் இரண்டாவதாக சின்னப்பொண்ணுவை நாமினேட் செய்கிறார்.

பிரியங்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரியங்காவை அக்சரா நாமினேட் செய்கிறார். ரூல்ஸ் பிரேக் செய்துவிட்ட விஷயத்தில் பிரியங்கா ஆர்ப்பாட்டம் செய்ததாக அவர் காரணம் கூறுகிறார் 

மேலும் பிரியங்காவுக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவரான அபிஷேக் நேற்று வெளியேறிவிட்ட நிலையில் நிரூப்புக்கும் பிரியங்காவுக்கு நேற்று பிரச்சினை வெடித்தது. 

இதனை அடுத்து அந்த பிரச்சனையை அடிப்படையாக கொண்டு நிரூப் பிரியங்காவை நாமினேட் செய்கிறார். அதேபோல் சின்ன பொண்ணுவும் பிரியங்காவை நாமினேட் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இமான் அண்ணாச்சி இசைவானியையும், இசைவானி மற்றும் தாமரை ஆகிய இருவரும் இமான் அண்ணாச்சியையும் நாமினேட் செய்கின்றனர். மொத்தத்தில் இந்த வாரம் பிரியங்காவுக்கு குறி வைக்கப்பட்டது போல் இன்றைய புரமோவில் இருந்து தெரிய வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







 
NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...