என்னது பிக் பாஸ் நைட்டியை திருடினாரா? கூடிட்டே போகும் பிரியங்காவின் கிரைம் ரேட் !

3 years ago 415

சின்னப்பொண்ணுவின் நைட்டியை பிக் பாஸ் திருடிவிட்டார் என கோபம் வர மாதிரி பிரியங்கா பண்ண காமெடியால் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

பாடகி சின்னப்பொண்ணுவின் நைட்டியை திருடி பிக் பாஸ் என்ன செய்ய போகிறார். அவரது நைட்டி காணவில்லை என அவர் ஒரு பக்கம் புலம்பியபடி தேட அவர் என்ன சொல்கிறார் என்பதை கூட காதில் சரியாக போட்டுக் கொள்ளாமல், பிக் பாஸையே நைட்டி திருடன் என பட்டம் கட்டி பிரியங்கா கலாய்த்துள்ளார்.

மேலும், உன் ஆளுக்கு வேணும்னா நீ போய் வாங்கி குடு.. அது என்ன சின்னப்பொண்ணுவின் நைட்டியை திருடுறது என கேமராவை பார்த்து பிக் பாஸை எந்தளவுக்கு ஓட்ட முடியுமோ அந்த அளவுக்கு ஓட்டிவிட்டார் பிரியங்கா. ஆனால், பிரியங்காவின் இந்த சேட்டைகள் எல்லாம் ரசிக்கும் படியாக இல்லை என ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் புரமோவில் மைக் சரியாக மாட்டாமல் பிரியங்கா இருந்ததற்கு பிக் பாஸ் அதிரடியாக வார்ன் பண்ண இதுதான் காரணம் என நெட்டிசன்கள் ஆன் தி ஸ்பாட்டிலேயே சமூக வலைதளங்களில் பிரியங்காவை கலாய்த்து வருகின்றனர்.

விஜய் டிவியின் செல்லப் பிள்ளைகளில் முதன்மையானவரான பிரியங்காவை இந்த நிகழ்ச்சிக்கே கெஞ்சாத குறையாக அழைத்து வந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் பிக் பாஸை விடாமல் கலாய்க்க அவருக்கு ஏகபோக உரிமைகளும் வழங்கப்பட்டு வருவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அடுத்த அர்ச்சனா என்றே பிரியங்காவை ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ள நிலையில், ஓவியாவை போல கேமராவிடம் பேசி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப பிரியங்கா முயற்சித்து வருகிறார் என்றும் ஆனால், அவர் நினைப்பது எல்லாம் பிக் பாஸிடம் பலிக்காது, பிரியங்கா மாட்டும் போதெல்லாம் பிக் பாஸ் வசமாக வைத்து கலாய்த்து விடுவார் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் பிரியங்காவை வெளுத்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டிற்கு காலடி எடுத்து வைத்ததும் இனிமேல் விஜய் டிவியில் எந்தவொரு வாய்ப்பும் கிடைக்காது என்றும் ஓப்பனாக பிரியங்கா லேட்டஸ்ட் எபிசோடில் வெறித்தனமாக பேசி டிஆர்பியை எகிற வைக்கிறேன் என்கிற பெயரில் காலி பண்ணாமல் இருந்தால் சரி என ரசிகர்கள் கும்பிடு போட்டு வருகின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...