ஐக்கி பெர்ரியுடன் மழையில் விளையாடிய அபிஷேக்.. பையன் தனியா லவ் டிராக்?

3 years ago 196

திடீரென சென்னையில் விடிய விடிய மழை பெய்யுதே மறுபடியும் பிக் பாஸ் வீட்டுக்குள் தண்ணி வந்துடுமோ என ரசிகர்கள் கவலைப்பட தொடங்கிய நிலையில், மழை பெய்யும் போது பிக் பாஸ் போட்டியாளர்கள் என்னலாம் பண்ணாங்கன்னு இந்த எபிசோடில் எடிட்டர் சின்னதா ஒரு டிராக் போட்டு காட்டிட்டார்.

ராஜு ஜெயமோகன் ஒரு பக்கம் மழையை ஃபீல் பண்ணி என்ஜாய் பண்ண மறு பக்கம் அபிஷேக் மற்றும் ஐக்கி பெர்ரி மழையில் அடித்துக் கொண்டு விளையாட ஆரம்பித்தனர்.

இன்னமும் இந்த வீட்டில் யாருக்கு லவ் ஸ்டோரி ஸ்டார்ட் ஆகும் என காத்துக் கிடக்கும் ரசிகர்கள் அபிஷேக் ஐக்கியை ஜோடி சேர்க்க ஆரம்பித்து விட்டனர்.

கடந்த இரு நாட்களாக சென்னையின் பல இடங்களில் கன மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், பிக் பாஸ் வீட்டை மட்டும் அது சும்மா விட்டு விடுமா? என்ன பிக் பாஸ் கார்டன் ஏரியாவில் பெய்த நல்ல மழையை போட்டியாளர்களில் சிலர் நல்லாவே என்ஜாய் பண்ணாங்க.

நீச்சல் குளம் இருந்த இடத்தை உபயோகமாக மாற்றுகிறேன் என்கிற பெயரில் பேஸ்மென்ட் ஜெயில் போட்ட அந்த அறிவாளியைத் தான் ஒட்டுமொத்த பிக் பாஸ் குழுவும் வலை வீசி தேடி வருகிறதாம். 

தொடர்ந்து மழை அடித்தால், பேஸ்மென்ட் ஜெயிலுக்கு வார வாரம் எப்படி போட்டியாளர்களை அனுப்ப முடியும் என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

திடீரென பெய்த மழையை விட்டு ஓடி ஒதுங்காமல் நல்லா கேமரா நம்மை இப்போ ஃபோகஸ் செய்யும் என நினைத்து ராஜு ஜெயமோகன் ரசித்த படி அதில் நனைய அபிஷேக் ராஜா மற்றும் ஐக்கி பெர்ரி இடையே புகுந்து அவரது ஆசையில் பெரிய பாராங்கல்லையே எடுத்து போட்டு விட்டனர்.

ஐக்கி பெர்ரி மற்றும் அபிஷேக் ராஜா இருவரும் திடீரென மழை நீரை மாறி மாறி கால்களால் வாரி இரைத்து அடித்து சண்டை போடுவது போல கொடுத்த கன்டென்ட் ராஜு ஜெயமோகனை நிச்சயம் கடுப்பாக்கி இருக்கும். 


இதுவரை இந்த சீசனில் காதல் டிராக் ஆரம்பிக்காத நிலையில், சீக்கிரமே லவ் டிராக்கை அபிஷேக் ராஜா ரெடி பண்ணிடுவார் போல தெரியுது என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


யூடியூப் விமர்சகரான அபிஷேக் ராஜாவுக்கு கடந்த 2017ம் ஆண்டு தீபா நடராஜன் என்பவருடன் திருமணம் ஆனது. ஆனால், திருமண உறவு சரியாக செல்லாத நிலையில், கடந்த 2019ல் விவாகரத்தும் ஆகிடுச்சு. 


அதனால், பிக் பாஸ் வீட்டில் நிச்சயம் ஏதாவது காதல் ட்ராக் அபிஷேக்கிற்கு வர வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் ஜோசியம் பார்த்து வருகின்றனர். பிக் பாஸ் எடிட்டர் இந்த மழை சீனுக்கே லவ் சாங் புரமோ போட்டு இருந்திருக்கலாம் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...