ஒரு நோ... எத்தனை மாடுலேஷன்? ஜூலியை நினைவுப்படுத்திய பிரியங்கா..

3 years ago 354

பெரிதாக சண்டை சச்சரவுகள் என இன்னும் தொடங்காத நிலையில் கொஞ்சம் சுணக்கமாவே இருந்தது பிக்பாஸ் வீட்டின் முதல் நாள்.

நேற்றைய புரமோக்களிலேயே விஜய் டிவி தொகுப்பாளரான பிரியங்காவின் பர்ஃபாமன்ஸ் தான் அதிகம் காட்டப்பட்டது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கையோடு எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் ஃபன் பண்றோம் என சக போட்டியாளர்களிடம் உறுதி கொடுத்தார் பிரியங்கா.


நேற்றைய எபிசோடில் டீம் பிரிக்கும் போதே நாங்கல்லாம் ஒன்னானோம் பாத்ரூம் கழுவி ஃபிரண்டானோம் என முழக்கம் போட்டு ஒட்டு மொத்த கவனத்தையும் பெற்றார். அவரது அந்த செயல் ஜூலியின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவுப் படுத்தியது.

அதனை தொடர்ந்து ராஜு டீம் பாத் ரூம் கழுவியதை விமர்சித்தார். ஏன் இடம் ஈரமாக உள்ளது என்று கேட்டு வீட்டின் கேப்டனை போல் பந்தா காட்டினார் பிரியங்கா. ஆனால் அந்த டீம்மோ பிரியங்காவுக்கு மொக்கை கொடுத்தது.

அதன்பிறகு, டைனிங் டேபிளில் சக பெண் போட்டியாளர்களுடன் அமர்ந்திருந்த பிரியங்கா, நோ என்ற வார்த்தையை பல வித எக்ஸ்பிரஷன்களுடன் கூறலாம் என முன்னெடுத்தார். 

இதில் இமான் அண்ணாச்சியையும் சேர்த்துக் கொண்டனர். எந்த எமோஷன்ஸும் இல்லாமல் நோ சொல்ல வேண்டும், சிரித்துக் கொண்டே நோ சொல்ல வேண்டும். கோபமாக நோ சொல்ல வேண்டும், கிளுகிளுப்பாக நோ சொல்ல வேண்டும் என பல மாடுலேஷன்களில் நோ கூறினார்.

கடைசியாக இமான் அண்ணாச்சி அழுது கொண்டே நோ சொல்லலாம் என அவர் பங்குக்கு சொல்ல அழுதுக் கொண்டே நோ என்று கூறி முடித்தனர். சமைக்கும் போதும் இட்லி உப்புமா செய்த பிரியங்கா அந்த இடத்திலும் ரைம்மிங்காக பேசி தனது இருப்பை உறுதி செய்தார். இப்படி கிடைக்கும் கேப்பில் எல்லாம் கிடா வெட்டி வருகிறார் பிரியங்கா.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...