ஒரே நேரத்தில் சுருதி - அக்ஷராவை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பிய நடிகர் கமல்ஹாசன்!!

3 years ago 419

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்ட்ரோ சூப்பராக இருந்தாலும், அதில் நடக்க இருக்கும் பிரச்சனைகளை தான் பிக்பாஸ் ரசிகர்கள் ரசிப்பார்கள். இந்நிலயில் மாடலிங் துறையில் இருந்து, பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள சுருதி மற்றும் அக்ஷரா ரெட்டியை ஒரு சமயத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளார் கமல்ஹாசன்.

சுருதி, தன்னை பற்றி கூறிய போது... தான் ஒரு நேஷனல் லெவல் கூடை பந்து வீராங்கனை என்பதால், சென்னையில் வந்து இன்ஜினியரிங் படிக்க வாய்ப்பு கிடைத்தது. தனக்கு ஒரு நிறுவனம் ஸ்பான்ஸர் செய்து தான் படிக்க வைத்தது. 

பின்னர் மாடலிங் என்கிற ஒரு துறை இருக்கு என்பதே தெரியாமல் தான் அதன் உள்ளே நுழைத்தேன். பலரும் ஏன் இந்த துறைக்கு வந்தாய்... என கேட்டபோது இதில் இருக்க வேண்டும் என முடிவு செய்தேன். யாரவது எதையாவது வேண்டாம் என சொன்னால் அதனை செய்ய வேண்டும் என தோன்றியது. தற்போது இந்த துறையிலும் என்னால் சாதிக்க முடிந்ததாக கூறியுள்ளார்.

இவரை தொடர்ந்து அக்ஷரா ரெட்டி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். மிகவும் பொறுமையான பெண்ணாகவே பார்க்கப்படும் அக்ஷரா, கடந்த 2019 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் பட்டம் பெற்றவர். 

மேலும் பல்வேறு மாடலிங் விளம்பரங்கள், மற்றும் கன்னட படத்திலும் நடித்துள்ளார். கமல்ஹாசனின் மகள்களை போலவே சுருதி - அக்ஷரா என பெயர் கொண்ட இவர்களை, பிக்பாஸ் மேடையில்... கேட் வாக் செய்ய வைத்த கமல், இருவரையும் ஒன்றாகவே பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பினார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...