ஒரே பிரஷ்தான் யூஸ் பண்ணுவோம்.. அவர் இல்லாம எப்படி வாழுறது.. கண்ணீர்விட்ட பாவனி!

3 years ago 524

பிக்பாஸ் வீட்டில் அழகு பதுமையாக வலம் வரும் போட்டியாளர்களில் ஒருவர் பாவனி ரெட்டி. சீரியல்கள் மட்டுமின்றி சினிமாவிலும் நடித்து வருகிறார். 

இந்த நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்டுள்ள கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் பேசிய பாவனி ரெட்டி தனது கணவர் மரணம் குறித்து உருக்கமாக பல்வேறு தகவல்களை உருக்கமாக பகிர்ந்து கொண்டார்.

அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, வேலைக்கு போனேன் அந்த வேலையெல்லாம் எனக்கு செட் ஆகவில்லை. பின்னர் பேப்பரில் வந்த விளம்பரத்தை பார்த்து போன் செய்து அங்கு போனேன். போட்டோ கொண்டு வர சொன்னார்கள். பாஸ்போர்ட் சைஸ் போட்டோவா என்று கேட்டேன்.

பின்னர் ஒரு படத்தில் நடித்தேன். அப்போது தான் எனக்கு ஒரு காதல் புரபோஸ் வந்தது. அவர்தான் பிரதீப். அவர் ஹைட் அன்ட் வெயிட்டாக ஹேண்ட்சமாக இருந்ததால் எனக்கும் பிடித்தது. வீட்டை விட்டு போய்விட்டோம். பின்னர் சினிமா வேண்டாம் என்று சீரியலில் நடிக்க ஆரம்பித்தோம்.

இருவரும் ஒரே சீரியலில் ஜோடியாக நடித்தோம். பின்னர் அவர்கள் வீட்டில் ஏற்றுக்கொண்டார்கள். இருவரும் சூப்பராக கல்யாணம் செய்து கொண்டோம். வீடு கட்டிணோம். சீரியலில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது கர்ப்பமாகிவிட்டேன். டாக்டர் பெட் ரெஸ்ட் எடுக்க சொன்னார்கள். இதனால் சீரியலில் இருந்து விலகுவதாக சொல்ல இருந்தேன்.

ஆனால் அதற்குள் அபார்ஷன் ஆகிவிட்டது. இதனைக் கேட்ட பிரதீப் சரி வீடு கட்டிய பிறகு பிளான் பண்ணிக்கொள்ளலாம் என்றார். ஒரு நாள் அண்ணாவின் பிறந்த நாள் வந்தது. 

அண்ணா என்றால் உடன் பிறந்தவர் இல்லை. சிறு வயதில் இருந்து பழக்கம். அந்த பார்ட்டியில் பிரதீப் நிறைய குடித்திருந்தார். சிகரெட்டும் எடுக்கப்போவதாக கூறினார். நான் வேண்டாம் என்றேன்.

பின்னர் சண்டை போட்டு விட்டு காரை எடுத்துக்கொண்டு போய்விட்டார். பின்னர் வீட்டுக்கு வந்த போது இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை வந்தது. கண்ணாடியை உடைத்து கையை காயப்படுத்திக் கொண்டார். ஒரு ரூமில் அண்ணா தூங்கினார். எங்களுடைய ரூம்முக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

பீரோவில் இருந்த என் டிரெஸையெல்லாம் எடுத்து கீழே போட்டார். ஷூட்டிங் செல்வதற்காக அலாரம் வைத்திருந்தேன். அலாரம் அடித்ததும் கதவை தட்டினேன் திறக்கவில்லை. கதவில் இருந்த இடைவெளி வழியாக பார்த்தேன். அப்போது அவருடைய கால் மட்டும் தெரிந்தது. போதையில் கீழே படுத்திருக்கிறார் என்று நினைத்தேன்.

மீண்டும் பார்த்த போதுதான் அவர் தூக்கில் தொங்கி விழுந்திருப்பது தெரியவந்தது. அண்ணாவை எழுப்பி கதவை உடைத்து பார்த்தோம். அப்போது அவர் இறந்து விட்டார் என்று எனக்கு தெரியாது. எழுந்து வாடா என்று அவரை அடித்தேன். எங்கள் வீட்டுக்கு தகவல் தெரிவித்தோம். எல்லோரும் வந்தார்கள். சிலர் என்னையும் அண்ணாவையும் சேர்த்து வைத்து தவறாக பேசினார்கள்.

நாங்கள் தவறாக இருந்ததை பார்த்துதான் பிரதீப் தற்கொலை செய்து கொண்டார் என்று சிலர் கூறினர். சிலர் நாங்கள்தான் கொலை செய்து விட்டோம் என்றனர். 

என் அப்பா அம்மாவை போலீசார் அழைத்து சென்று விசாரித்தார்கள். நாங்கள் இருவரும் ஒரே பிரஷ் தான் பயன்படுத்துவோம். அவரை ஒரு குழந்தையை போல் பார்த்துக்கொண்டேன். அவர் இறந்த பிறகு எப்படி வாழ்வது என்று தெரியவில்லை.

வீடு கட்டிணோம் தனியாக எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. என் கணவர் இறந்த போது எனக்கு அழுகை வரவில்லை கோபம்தான் வந்தது. நேரா பார்த்தா கன்னத்துல அறையணும் போல இருந்துச்சு.. அவர் இறந்தப்போ அவருடைய உடம்பை போட்டு அடித்தேன்.

வீட்டை விட்டு ஓடி வந்து கல்யாணம் பண்ணி, எவ்வளவு கனவுகளோடு வாழ்ந்தோம் ஆனால் நடுவில் விட்டுவிட்டு போய்விட்டார். என மாமியார் குடும்பத்தினர் ரொம்ப சப்போர்ட்டாக இருந்தனர். கணவர் மரணத்தை மறக்க சீரியலில் நடித்தேன் நடித்தேன். சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒருவர் காதலிப்பதாக கூறினார்.

ஆனால் அதுவும் சரியா வரவில்லை. என் வாழ்க்கையில் தனியா இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறது என்று நினைக்கிறேன். பின்னர் ஒரு நாள் கால் வந்தது, விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறீர்களா என்று கேட்டு.. இப்போது பிக்பாஸ் வந்துள்ளேன் என்று கூறி தனது கணவரின் மரணம் குறித்து உருக்கமாக பேசினார் பாவனி.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...