கடும் காயங்களுடன் பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி - அடித்து உதைத்த கணவர் கைது

3 years ago 519

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இவர் கடந்தாண்டு சாம் பாம்பே என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் மும்பை புறநகர் பகுதியில் வசித்து வந்தனர். 

இந்நிலையில், நடிகை பூனம் பாண்டேவுக்கும் அவரது கணவருக்கும் இடையே நேற்று திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது சாம் பாம்பே சரமாரியாகத் தாக்கியதில், நடிகை பூனம் பாண்டே பலத்த காயம் அடைந்திருக்கிறார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து, நடிகை பூனம் பாண்டே தன் கணவர் மீது போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சாம் பாம்பேவைக் கைது செய்தனர். 

தற்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...