கதையை மாற்ற சொன்ன விஜய்.. வேற ஹீரோவை வைத்து எடுத்து தலையில் துண்டை போட்ட சுந்தர் சி

3 years ago 499

தளபதிக்கு கதை கூற வாய்ப்பு கிடைப்பதே கோலிவுட்டில் பெரிய வாய்ப்பு, ஆனால் அப்படி கிடைத்த வாய்ப்பை தவற விட்டுள்ளார் சுந்தர் சி.

அதாவது 2019-ல் விஷால், தமன்னா, ராம்கி, யோகிபாபு போன்ற பிரபலங்கள் நடிப்பில் ஹிப் ஹாப் ஆதியின் இசையில் வெளிவந்த படம் ஆக்ஷன். சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்து படுதோல்வியடைந்தது.

முதல் ஷோ முதல் காட்சி கூட ரசிகர்கள் இல்லையாம், இந்த படத்தில் விஷாலுக்கு முன்னதாக தளபதி விஜயிடம் கதையை கூறியதாகவும். கதையில் ஒரு சீனை மாற்றும் படி கேட்டுள்ளார் தளபதி விஜய்.

அதாவது பாகிஸ்தானில் விஷால் போய் மாட்டுவது போன்ற ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சி மட்டும் வேண்டாம், கண்டிப்பாக ஓடாது என்று விஜய் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை.

நீங்க இல்லன்னா எனக்கு ஹீரோவை இல்லையா என்பது போன்று விஷாலை வைத்து இந்த படத்தை வெளியிட்டார். எதிர்பாராத தோல்வியை சந்தித்தார் சுந்தர்சி.

தற்போது 2 வருடம் கழித்து அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை முடித்துள்ளார் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



 
NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...