கமலை வைத்து கொளுத்தி போட்ட பிக்பாஸ்... இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல...

3 years ago 402

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் ஏழாம் நாளான நேற்று கமல் வரும் வார இறுதி எபிசோடின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதில் கமல் ஒவ்வொரு டீமிடமும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஹவுஸ்மேட்கள் என்ன நினைக்கிறார்கள் என கேட்டார். தொடர்ந்து தனது கருத்தையும் கமல் கூறினார்.

பிறகு ஹவுஸ்மேட்கள் 16 பேர் பற்றி ரெவ்யூ கொடுக்கும் படி அபிஷேக் ராஜாவிடம் கூறினார். அவரும் அனைவர் பற்றியும் தனது கருத்தை கூறினார். இமான் அண்ணாச்சி பற்றி அபிஷேக் கூறிய கருத்தை ஏற்க அவர் மறுத்து விட்டார். இருந்தாலும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தாமல் இருந்து விட்டார்.

பிரியங்கா மற்றும் சின்ன பொண்ணு பற்றி ரெவ்யூ கொடுக்கும் போது அபிஷேக் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். பிரியங்காவை பார்க்கும் போது தனது அக்காவை போல் தோன்றுவதாகவும், தனது அம்மாவுடன் இருக்க முடியாமல் போன குறையை போக்க சின்ன பொண்ணுவிடம் தினமும் காலையில் ஆசீர்வாதம் வாங்குவதாகவும், அவர்களிடம் குக்கிங் டீம் போனதால் தான் வீட்டில் பிரச்சனை இல்லாமல் ஒற்றுமையாக இருப்பதாகவும் அபிஷேக் கூறினார்.

இதைத் தொடர்ந்து ஒரு போர்ட்டை எடுத்து வரச் சொல்லி, போட்டியாளர்கள் அனைவரும் யாராவது 4 பேருக்கு காரணம் சொல்லி டிஸ்லைக், லைக் கொடுக்க வேண்டும் என்ற விளையாட்டை நடத்தினார் கமல். இதில் ஒவ்வொருவராக வந்து காரணம் சொல்லி லைக், டிஸ்லைக் கொடுத்தனர். இதில் சிலரின் கருத்தை, சிலர் ஏற்கவில்லை.

குறிப்பாக அக்ஷராவிற்கு அதிகமானவர்கள் டிஸ்லைக் கொடுத்தனர். அதற்கு காரணமாக அவர் யாரிடமும் சரியாக பேசவில்லை என காரணம் கூறினர். இதை தாங்கிக் கொள்ள முடியாத அக்ஷரா, சின்ன பொண்ணுவிடம் சொல்லி அழுகிறார். உடனடியாக இசைவாணி, மதுமிதா ஆகியோர் தாங்கள் டிஸ்லைக் கொடுத்தற்கு விளக்கம் கொடுத்து, அதை நியாயப்படுத்தினர்.

அதே சமயம் ரூமிற்குள், டிஸ்லைக் கேம் பற்றி பிரியங்காவிடம் சீரியசாக பேசிக் கொண்டிருக்கிறார் தாமரைச் செல்வி. இது விளையாட்டு, வெளியேற்றப்பட வேண்டிய யாராவது இரண்டு பேரின் பெயர்களை சொல்லுன்னு சொல்லுவாங்க. 

இதில் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், யாருடைய மனமும் புண்படுமோ என பார்க்க கூடாது என விளக்கம் கொடுக்கிறார் பிரியங்கா. நிரூப்பும், நீங்கள் பாசம் வைத்திருந்தாலும் வேறு வழியில்லை. டிஸ்லைக் கொடுத்து தான் ஆக வேண்டும் என்கிறார்.

இதைத் தொடர்ந்து அதிக டிஸ்லைக்கள் பெற்றதால் மனமுடைந்து கார்டனில் தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார் அக்ஷரா. அனைவரும் கடைசி வரை ஒற்றுமையாக இருந்து காட்டுவோம் என கமலிடம் பிரியங்கா கூறிய சிறிது நேரத்திலேயே ஒரு கேம்மை நடத்தி, ஒற்றுமையை உடைத்து போட்டு விட்டார் பிக்பாஸ்.

முதல் வாரத்தின் இறுதியில் கமல் மூலம் வீட்டிற்குள் நெருப்பை கொளுத்தி போட்டுள்ளார் பிக்பாஸ். இதற்கிடையில் ஹவுஸ்மேட்களில் இன்னும் 9 பேர் வேறு தங்களின் கதையை சொல்ல வேண்டி உள்ளது. வரும் வாரத்தில் எலிமினேஷ் ப்ராசஸ் வேறு நடக்கும். பிக்பாஸ் இன்று கொளுத்தி போட்ட நெருப்பால், இன்னும் என்னென்ன வெடி எல்லாம் வெடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...