கரீனா கபூருக்கு பாப்பா பொறந்துடுச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

3 years ago 422

பாலிவுட்டின் முன்னணி நடிகர் சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூருக்கு ஏற்கனவே தைமூர் எனும் ஆண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவதாகவும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த ஆண்டு போடப்பட்ட லாக்டவுனில் இரண்டாவது முறையாக கருவுற்ற நடிகை கரீனா கபூர் தற்போது ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பாலிவுட் ரசிகர்கள் இந்த சந்தோஷ தருணத்தை கொண்டாடி வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூருக்கு தற்போது 40 வயதாகிறது. கடந்த 2012ம் ஆண்டு நடிகர் சைஃப் அலி கான் கரீனா கபூரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். 

இந்த நட்சத்திர தம்பதியினருக்கு கடந்த 2016ம் ஆண்டு தைமூர் அலி கான் எனும் ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...