காதலருடன் போதைப்பொருள் பயன்படுத்திய தமிழ் நடிகை கைது

3 years ago 534

மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த பிறந்தநாள் விழா ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பெண் ஒருவர் ஆண் நண்பருடன் சந்தேகப்படும் படியாக அங்குள்ள அறைக்கு சென்றதை கண்டனர். பின்னர் அந்த அறைக்கு சென்று காவல்துறையினர் சோதனை நடத்தினர்.


அப்போது அங்கு நடிகை நைய்ரா ஷா என்பவர் சிகரெட்டில் போதைப்பொருளை வைத்து புகைத்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடிகை நைய்ரா ஷா மற்றும் அவரது காதலரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவர்கள் இருவரும் போதைப்பொருள் உட்கொண்டது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து நைய்ரா ஷாவும் அவரது காதலரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் பிணையில் இருவரும் விடுவிக்கப்பட்டனர். 


நைய்ரா ஷா மிருகா என்ற தமிழ் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...