கெட்டப்பை மாற்றிய நடிகர் சிம்பு

4 years ago 377

கெட்டப்பை மாற்றி அசத்தல் போட்டோ ஷூட் எடுத்துள்ளார் நடிகர் சிம்பு. இந்த படங்களை பார்த்து ரசிகர்கள் கருத்து வெளியிட்டு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் நடிகரும் டிஆர் மகனுமான சிம்பு தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் மாநாடு மற்றும் ஈஸ்வரன். இந்த இரண்டு திரைப்படங்களையும் சிம்புவின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

சில காலமாக சிம்பு நடிக்கும் படங்களில் சரியான நேரத்திற்கு வரவில்லை என பல குற்றச்சாட்டுகள் ஏற்பட்டது.

ஆனால் அதை எதையும் பொருட்படுத்தாமல் சிம்பு தனது வெற்றி நிரூபிப்பதற்காக கடும் முயற்சியில் ஈடுபட்டு உடல் எடை மற்றும் தோற்றத்தை மாற்றியுள்ளார். 

தற்போது சிம்பு ஃபோட்டோ ஷூட் ஒன்றை எடுத்து அதனை வெளியிட்டுள்ளார். அதில் ஹாலிவுட் ரேஞ்ச்சுக்கு தனது கெட்டப்பை மாற்றி வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் மிரண்டுபோய் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...