‘கே.ஜி.எப்-2’ புதிய போஸ்டரை பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம்

3 years ago 376

கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. 

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்தை இந்த மாதம் வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழு, கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளிவைத்தது. 


மேலும் இப்படத்தை டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பான அறிவிப்பு சஞ்சய் தத்தின் பிறந்தநாளான இன்று வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த அறிவிப்புக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் சஞ்சய் தத்தின் பிறந்தநாளான இன்று அதீரா கதாபாத்திரத்தின் தோற்றம் அடங்கிய போஸ்டரை வெளியிட்ட கே.ஜி.எப்-2 படக்குழு, அதில் ரிலீஸ் குறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள், கமெண்ட் மூலம் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.  

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...