கொரானாவிலிருந்து மீண்டும் மரணமடைந்த சீரியல் நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்

3 years ago 489

மலையாள சினிமாவில் மந்திரகொடி, ஹரிச்சந்தனம், சீதா போன்ற சீரியலில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் நடிகை சரண்யா சசி.  இதையடுத்து, சோட்டா மும்பை, தளப்பாவு, பம்பாய், சாக்கோ ரண்டமான் போன்ற படங்களிலும் நடித்து பிரபலமானார். பச்சை என்கிற காத்து படம் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.

கடந்த 2012ல் புற்றுநோய் இருப்பதை கண்டறிந்த பின் மலையாள நடிகர் சங்கம் உதவியதில் அதற்கான 8 அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.  இதையடுத்து கடந்த ஆண்டு கொரோனா பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அடுத்த அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார்.

பின் அதிலிருந்து மீண்டு வந்தநிலையில் இரத்தத்தில் சோடியம் அளவு குறைந்து இருந்ததால் நிமோனியா பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சையிலேயே இருந்தார். 

போகபோக உடல்நிலை மோசமான கவலைக்கிடத்திற்கு பின் அவரது 35 வயதில் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். 9 அறுவை சிகிச்சைகளுக்கு பின் மலையாள நடிகை சரண்யா சசி உயிரிழந்திருப்பது மலையாள சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...