கொளுத்தி போட்ட அண்ணாச்சி! வெடிக்கப்போகும் 'பிக்பாஸ்' வீடு!

3 years ago 363

நேற்றைய தினம், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு முதல் லக்ஸூரி டாஸ்காக, அவர்கள் கடந்து வந்த பாதையை பற்றி ஒரு கதையாக கூற வேண்டும் என்றும், மற்றவர்கள் தங்களுடைய கருத்தை எமோஜி  மூலம் தெரிவிக்காமல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் நேற்றைய தினம், இசை வாணி, மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் தாங்கள் கடந்து வந்த கஷ்டங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர். இவர்களை தொடர்ந்து இன்றைய தினம், பிரபல காமெடி நடிகரும் தொகுப்பாளருமான இமான் அண்ணாச்சி தன்னுடைய வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொண்டு, பேசினார்.

இந்த முறை பிக்பாஸ் டைட்டில் வின்னராக ஒரு காமெடி நடிகர் வந்தால் நன்றாக இருக்கும் என்பதுபோல் கூறி சிரிக்கிறார் அண்ணாச்சி. இவர் சிரித்தது பலருக்கு கடுப்பை ஏற்படுத்தியது என, இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோ மூலம் தெரிகிறது.

நதியா இதுகுறித்து அவர் அங்கு பேச வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கிறார். பின்னர் இவர் சிரித்ததற்காக... நிரூப்புக்கும், சிபிக்கும் இடையே சண்டை வருவதையும் பார்க்க முடிகிறது. 

திருநங்கை போட்டியாளரான நமீதா, கஷ்டப்பட்டோம் கஷ்டப்பட்டோம் என சொல்ல வேண்டாம்... கஷ்டப்பட்டால் தான் இந்த இடத்திற்கு வர முடியும் என கூறுகிறார். 

பின்னர் நிரூப் மற்றும் அபிஷேக் ஆகியோருக்கு இடையே சண்டை வரும் காட்சிகளும் காட்டப்படுகிறது. புரோமோவில் இறுதியில் நமீதா, ’வீட்டில் சண்டை ஆரம்பிக்க போகுது’ என்று கூறுவதுடன் முடிவடைகிறது.

எப்படியோ... அண்ணாச்சி புண்ணியத்தால் பல பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் இன்றைய தினம் சில பிரச்சனைகளுக்கும் குறைவிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...