சத்தமில்லாமல் பெண் குழந்தைக்கு அம்மாவான ஸ்ரேயா சரண்.. வைரலாகும் புகைப்படம்!

3 years ago 476

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா சரண். ரஜினி விஜய் விக்ரம் என பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் இவர் நடித்து வந்தார்.

வெளிநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு வெளிநாட்டில் செட்டில் ஆன ஸ்ரேயா அதன் பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில் இவர் கர்ப்பமாகி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள விஷயத்தை இதுவரை யாருக்கும் தெரியப்படுத்தாமல் ரகசியமாக வைத்துள்ளனர். 

தற்போது கர்ப்பமாக இருக்கும் போது எடுத்த புகைப்படம் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

வெளியாகியுள்ள இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குழந்தையை பெற்றெடுத்தது கூட யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்து உள்ளீர்களே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...