பிக் பாஸ் வீட்டில் சாப்பாடு கேட்டு கேவி கேவி அழுத பிரியங்கா. இமான் அண்ணாச்சி சமாதானப்படுத்தினார். பிக் பாஸ் வீட்டுக்கு வரும் போது பிரியங்காவின் அம்மா, அவ சாப்பாடுதான் எப்படி சாப்பிடப்போறானு தெரியவில்லை என்று வருத்தப்பட்டு கூறி இருந்தார்.
அவங்க வருத்தப்பட்டது போல, பிரியங்காவும் தற்போது சாப்பாட்டுக்காக அழுது வடிந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 19வது நாளான நேற்று, வீட்டில் ஒரு வித அமைதி நிலவியது. கடந்த 3 நாட்களாக பஞ்சதந்திர டாஸ்க்கை விளையாடி களைத்துப்போன ஹவுஸ்மெட்டுகள் ஓய்வெடுத்து அரட்டை அடித்து சிரித்து பேசி உள்ளனர்.
காலையிலேயே அபிஷேக், பவானி கிட்ட ப்ளீஸ் எதாவது சாப்பாடு பண்ணிக்கொடு என்று கேட்கிறார். இதற்கு பாவனி நான் வெஷல் வாஷ் டீம் என்கிறார். இசைவாணி உப்புமா பண்றாங்க.... உப்புமா என்றாலே எனக்கு ஹாஸ்டல்ல இருக்கிற மாதிரி இருக்கு என்று அழாத குறையாக பேசினார்.
இதையடுத்து, தன்னை சாப்பாட்டு பிரியை என்று எப்போதும் சொல்லிக்கொள்ளும் பிரியங்கா கேமரா முன் நின்று எனக்கு எதாவது சாப்பிட அனுப்பிவிடு அம்மா, எனக்கு எதுவுமே பிடிக்கல எனக்கு வேற எதாவது வேணும் என்று கேட்கிறார்.
வழக்கமாக எதையாவது பேசிக்கொண்டே இருக்கும் பிரியங்கா, அமைதியா இருப்பதை பார்த்த அண்ணாச்சி, பிரியங்கா... என்ன ஆச்சு என்று கேட்கிறார். எனக்கு எதாவது சாப்பிடனும் என்கிறார். உடனே அண்ணாச்சி என்ன வேணும் என்று கேட்கிறார்... எதாவது வேணும் அண்ணாச்சி என்று அவரை கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி கதறி அழுகிறார்.
ஒரு கதை சொல்லட்டுமாக டாஸ்கில் பிக் பாஸ் வீடே அழுதுவடிந்த நிலையில், பிரியங்கா நான் கடந்து வந்த பாதை குறித்து அழகாக சிரித்து கொண்டு பேசி இருந்தார். ஆனால், சாப்பாட்டுக்கு போய் இப்படி அழுகிறாரே என்று நினைக்கத் தோன்றுகிறது.
பஞ்சதந்திர காயின் டாஸ்கில் பக்காவா பிளான் போட்டு கேம் விளையாடினார் பிரியங்கா. பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பிரியங்காவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்த நிலையில், இப்போது, பலரும் அவரை பங்கதமாக கிண்டலடித்து வருகின்றனர். போன சீசனில் விஷ பாட்டில் பட்டத்தை பெற்ற ரம்யா பாண்டியனின் பெயரை தற்போது பிரியங்காவுக்கு வைத்துள்ளனர் நெட்டிசன்ஸ்.