பிக்பாஸ் இல்லத்தில் மூன்றாம் நாள் வாத்தி கம்மிங் பாடலுடன் பட்டையை கிளப்பியது. இதற்கு ஹவுஸ்மெட்டுகள் வழக்கம் போல ஆட்டம் போட்டுவிட்டு பிக்பாஸூக்கு குட் மார்னிங் சொன்னார்கள்.
பாத்ரூமில் சின்னப்பொண்ணு தன் நைட்டியை தேடிக்கொண்டு வருகிறார். இதைப்பார்த்த பிரியங்கா என்ன தேடுறீங்க என்று கேட்க என் நைட்டியை காணும் என்கிறார். உடனே பிரியங்கா கேமிராவை பார்த்து.
என்ன பெரிய அண்ணா நீங்க எவ்வளவு பெரிய ஆளு நீங்க நைட்டியை திருடலாமா என்று கேட்கிறார். உடனே சின்னப்பொண்ணு முதலாளி எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுகிறார்.
இதையடுத்து, கடந்து வந்த பாதை குறித்து பேசும் இமான் அண்ணாச்சி, என்றுடைய பெயர் இமானுவேல் தூத்துக்குடியில் பிறந்தேன் சினிமாவில் நடிக்கனும் என்கிற ஆசையோடு வெறும் மஞ்சப்பையை எடுத்துக்கொண்டு சென்னை வந்தேன்.
கையில் காசு இல்லாததால் பல நாள் பனகல் பார்க்கில் தூங்கி இருக்கிறேன். ஒரு மளிகை கடையில் வேலைபார்த்தேன் அங்கையும் என்னால் தொடர்ந்து வேலை செய்ய முடியவில்லை.
மளிகை கடை, காய்கறி கடை போன்றவற்றில் வேலை செய்து என் குடும்பத்திற்கு பணத்தை அனுப்பினேன். சினிமாவில் நுழைய பல வருடம் போராடினேன். 18 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு கலக்கப்போவது யாரு சீசன் 1ல் கலந்து கொண்டேன். ஆனாலும் அந்த வாய்ப்பை என் வறுமையால் தவறவிட்டுவிட்டேன்.
அதையடுத்து, ஒரு சிறுதொலைக்காட்சியில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தவறவிட்டுவிடக்கூடாது என மிகவும் கடுமையாக உழைந்தேன். இதையடுத்து பிரபல தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன்.
அந்த நிகழ்ச்சிதான் என்னை இமான் அண்ணாச்சியாக மாற்றியது என்று கூறினார். மேலும், ஒரு நகைச்சுவை நடிகர் பிக் பாஸ் டைட்டிலை வின் பண்ண வேண்டும் என்று கூறினார். இதனால் அந்த வீட்டில் சலசலப்பு நிலவியது.
இமான் அண்ணாச்சிக்கு டிஸ்லைக் கொடுத்த நமீதா மாரிமுத்து இந்த கதையை சினிமா பார்த்தது போல இருக்கு அதனால் டிஸ்லைக் கொடுத்தேன் என்றார். பிரியங்கா ஹீரோக்கள் தான் பிக்பாஸ் டைட்டில் வின் பண்ணணுமா நகைச்சுவை நடிகரும் டைட்டில் வின் பண்ணணும் அதான் நான் லைக் கொடுத்தேன் என்றார்.