டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் வென்றவர் இவரா?

3 years ago 633

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் டிக்கெட் டு ஃபினாலே என்ற டாஸ்க் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

இந்த டாஸ்க்கில் நேற்று மூன்று பேர் இருந்த நிலையில் சஞ்சீவ் வெளியேற்றப்பட்டதை அடுத்து அடுத்த கட்டத்திற்கு அமீர் மற்றும் சிபி தேர்வு பெற்றார்கள் என்பதும் நேற்றைய நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்

இந்த நிலையில் இன்று அமீர், சிபி ஆகிய இருவரில் ஒருவர் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கை வெல்பவர் யார் என்பதற்கான போட்டி வைக்கப்பட்டிருக்கிறது. 

மணல் மூட்டையை கையில் பிடித்துக்கொண்டு நிற்க வேண்டுமென்ற டாஸ்க் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் கொட்டும் மழையில் இருவரும் மணல் மூட்டையை ஒரு கையில் பிடித்துக்கொண்டே நின்று கொண்டிருக்கின்றனர்

இந்த டாஸ்க்கின் இறுதிநேரத்தில் சிபி கீழே இறங்குவது போன்ற காட்சி தென்படுவதால் இந்த டாஸ்க்கில் அமீர் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது போல் தெரிகிறது. 

வைல்ட்கார்ட் போட்டியாளரான அமீர், தனது காலில் காயம் இருந்தும் மன உறுதியோடு விளையாடுவது பாராட்டுக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...