பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை முடிந்த நான்கு சீசன்களிலும் முதல் வாரத்தில் பிக்பாஸே அவரது இஷ்டத்துக்கு ஒருவரை கேப்டனாக அறிவிப்பார்.
அதன்படி மூன்றாவது சீசனில் வனிதா முதல் வாரத்தில் கேப்டன் ஆனார். அதனை தொடர்ந்து நான்காவது சீசனில் ரம்யா பாண்டியனை கேப்டனாக அறிவித்தார் பிக்பாஸ்.
அவர்களுக்கு கீழ் தான் டீம் பிரிக்கப்பட்டு டீம்முக்கு ஒரு கேப்டன் அறிவிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் இந்த சீசனில் நேரடியாக டீம்மை பிரித்துள்ளார் பிக்பாஸ். போட்டியாளர்களை லிவிங் ஏரியாவில் உள்ள சோஃபாவில் அழைத்து அமருமாறு கூறினார் பிக்பாஸ்.
தொடர்ந்து போட்டியாளர்களிடம் பேசிய பிக்பாஸ், இந்த பிக்பாஸ் வீட்டிற்கு கேப்டனாகும் தகுதி தனக்கு இருக்குன்னு நினைக்கும் 5 பேரை அழைத்தார்.
இதனைக் கேட்டு நடிகர் ராஜு, பாடகி சின்ன பொண்ணு, நமீதா, நிரூப் சந்திப், பாவனி ரெட்டி ஆகியோர் லிவிங் ஏரியாவில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா டிவி முன்பு வந்து நின்றனர். தொடர்ந்து பேசும் பிக்பாஸ் உங்களில் யார் எந்த அணிக்கு தலைவராக போகிறீர்கள் என்று கேட்டார்.
இதனைக் கேட்ட நடிகர் ராஜு, பத்ரூம் க்ளினிங் அணிக்கு கேப்டனாகலாம் என்று நினைக்கிறேன் என்றார். நமீதா மாரிமுத்து பாத்திரம் கழுவும் அணிக்கு கேப்டனாக இருப்பதாக கூறினார். சின்னப் பொண்ணு சமையல் அணிக்கு கேப்டனாக இருப்பதாக கூறினார். பாவனி ரெட்டி ஹவுஸ் கீப்பிங் அணிக்கு கேப்டனாக இருப்பதாக கூறினார்.
நிரூப்பும் போட்டியில் பங்கேற்றதால் ஹவுஸ் கீப்பிங்கை பிரித்துக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஒரு அணிக்கு ஒரு கேப்டன் தான் இருக்க முடியும் என்று கூறிய பிக்பாஸ் நிரூப்பை போய் உட்காரச் சொன்னார்.
இதனை பார்த்து சக பெண் போட்டியாளர்கள் நிரூப்பை கேலி செய்தப்படி இருந்தனர். தொடர்ந்து பேசிய பிக்பாஸ் யாரையும் கலந்தாலோசிக்காமல் தங்களின் அணியினரை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறினார் பிக்பாஸ்.
இதைத்தொடர்ந்து நடிகர் ராஜு தனது பாத்ரூம் அணிக்கு அபிஷேக், தாமரை செல்வி, வருண் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோரை தேர்வு செய்து கொண்டார். அடுத்தப்படியாக நமிதா மாரிமுத்து பாத்திரம் கழுவும் அணிக்கு மதுமிதா, ஸ்ருதி மற்றும் நிரூப் ஆகியோரை தேர்வு செய்து கொண்டார்.
பாடகி சின்னப் பொண்ணு தனது சமையல் அணிக்கு விஜய் டிவி தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டே, அக்ஷரா மற்றும் நடிகர் சிபி ஆகியோரை தேர்வு செய்தார். இதேபோல் பாவனி ரெட்டி தனது ஹவுஸ் கீப்பிங் அணிக்கு இசைவாணி, நாடியா சங், ஐக்கி பெர்ரி, அபினய் ஆகியோரை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து எப்படி பாத்ரூம் க்ளீன் செய்வது? எப்படி பாத்திரம் கழுவது, என்ன சமைப்பது என்பது என்பது குறித்து அந்தந்த அணி தலைவர்கள் தங்களின் அணியினரோடு ஆலோசித்தனர். தொடர்ந்து பாடல் கதை காம்ப்ளிமென்ட் என களைக்கட்டியது பிக்பாஸ் முதல் எபிசோட்.