தப்புதானே.. பிரியங்காவை வாய் அடைக்க வைத்த ராஜு!

3 years ago 440

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் தாமரையை சீண்டிய பிரியங்கா தெரியல தெரியலன்னு சொல்றீங்க... நாடகம் நல்லா போடுறீங்க என்று முழக்கமிட்டார்.

இதனால் தாமரை செல்விக்கும் பிரியங்காவுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. தனது தொழிலை பிரியங்கா தவறாக பேசுவதாக கூறிய தாமரை நாடகம் தான் தனக்கு உயிர் என்று கூறி கண்ணீர் விட்டார்.

இந்நிலையில் இன்றைய எபிசோடில் ராஜு பிரியங்காவிடம் சென்று நாடகம் போடுகிறாய் என்று சொல்வது தாமரையை காயப்படுத்துகிறது. இதனால் அவர் அழுகிறார், ஆகையால் அப்படி சொல்லாதீர்கள் என்று பிரியங்காவிடம் கூறினார்.

அதனைக் கேட்ட பிரியங்கா, அவர் அழுதால் அவரை சமாதானப்படுத்துங்கள். தெரியல தெரியலன்னு சொல்றிங்க... நாடகம் நல்லா ஆடுறீங்க என்பது எங்களின் ஸ்லோகம் அதை மாற்றிக்கொள்ள முடியாது என்றார். தொடர்ந்து பேசிய பிரியங்கா நான் அழும் போது யார் சமாதானப்படுத்துனீங்க என்று கேட்டார்.

அதற்கு நான் சமாதானப்படுத்தினது இல்லையா என்று கேட்ட ராஜு, தாமரையை நாடகம் போடுகிறார் என்று கூற வேண்டாம் என்றார். இதனைக் கேட்ட பிரியங்காக இது தாமரையே இல்ல... இரண்டு வாரங்களாக இருக்கும் தாமரை பழைய தாமரை இல்லை என்று கூறினார்.

இதனைக் கேட்ட பிரியங்கா, பாவனியை பிடிக்காது பிடிக்காது என்று அவர் முகத்திற்கு நேராகவே தாமரை சொல்கிறார். நியாயத்தை கேட்கும் ராஜு, பாவனியை பிடிக்காது என்று கூறி காயப்படுத்தும் தாமரையிடம் இதுகுறித்து ஏன் கேட்கவில்லை என்று கேட்டார் பிரியங்கா.

அதற்கு பதில் அளித்த ராஜு, தாமரையே வந்து தனக்கு பிடிக்கவில்லை என்றாரா? அல்லது போய் கேட்ட போது அப்படி கூறினாரா என்றார். இதனைக் கேட்ட பிரியங்கா போய் கேட்டபோதுதான் ஆமாம் எனக்கு பிடிக்காது என்று கூறினார் என்றார்.

அதற்கு பதில் கூறிய ராஜு, ஏன் போய் போய் கேட்குறிங்க? அது தப்புதானே.. பிடிக்கலன்னா பேசாம இருந்துட வேண்டியதுதானே என்றார். இதனைக் கேட்ட பிரியங்காவுக்கு பதிலே சொல்ல முடியவில்லை. வாயடைத்துப் போனார். 

பின்னர் ஒரு வழியாக கட்சி சகிதமாக தாமரையிடம் வந்த பிரியங்கா உங்கள் தொழிலை பற்றி கூற வில்லை காயப்பட்டிருந்தால் மன்னித்து விடுங்கள் என்றார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...