தலையில் முக்காடு... காதலர் விக்கியுடன் தரையில் அமர்ந்து சாப்பிடும் நயன்...!

3 years ago 512

நடிகை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் கடந்த 2018 ஆம் ஆண்டு அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்று வழிபட்ட போது, அங்கு பிரசாதமாக கொடுக்கப்படும் சப்பாத்தியை தலையில் முக்காடு போட்டு கொண்டு, சாப்பிட்ட வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

கோலிவுட்டில் தற்போது பரபரப்பு கிளப்பி வரும் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படத்தின் மூலம் பற்றிய காதல் தீ இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது. 

படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் தான் நயன்தாரா - விக்னேஷ் சிவனுடன் டேட்டிங் செல்வதை இருவரும் வழக்கமாக வைத்துள்ளார். அப்படி செல்லும் இடங்களில் எல்லாம், விதவிதமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டு  நயன்தாராவின் ரசிகர்களின் நெஞ்சங்களை புகையைவிட்டு வருகிறார்  விக்னேஷ் சிவன்.


சமீபத்தில் கூட 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பாக, தனி விமானம் மூலம் கொச்சிக்கு விசிட் அடித்த இருவரும், கேரளாவில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் விஷுவை கொண்டாடி விட்டு வந்தனர். 

பின்னர் நயன்தாரா ஹைதராபாத்தில் நடந்து வந்த 'அண்ணாத்த' படப்பிடிப்பில் படு பிசியாக மாறினார். படப்பிடிப்பு முடிந்த வந்த ஒரு சில நாட்களில் காதலனுடன் வந்த சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதுகுறித்தும் ஒரு சர்ச்சை சமூக வலைத்தளத்தில் பரவியது. நயன்தாரா தடுப்பூசி போடும் போது, ஊசியே தெரியவில்லை என சிலர் விமர்சனம் செய்ய அதற்கும் நயன்தாரா தரப்பில் இருந்து முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புகைப்படம் வெளியிடப்பட்டது. 

தற்போது படப்பிடிப்பு பணிகள் இல்லாமல், காதலனுடன் ஜாலியாக பொழுதை கழித்து வரும் நயன்தாராவின் பழைய வீடியோ ஒன்றை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

பொதுவாகவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதேனும் கோவில்களுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் ஜோடி, கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு முறை படப்பிடிப்பு முடித்த கையேடு வடமாநிலத்தில் உள்ள, அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். 

அப்போது அங்கு பிரசாதமாக அனைவருக்கும் கொடுக்கப்படும் சப்பாத்தியை, நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் வாங்கி சாப்பிட்ட வீடியோ இப்போது மீண்டும் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவில் நயன்தாரா வெள்ளை நிற சல்வாரில், தலையில் முக்காடு போட்டபடி சாப்பிடுகிறார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...