தவறி விழுந்த நடிகர் பிரகாஷ் ராஜ் வைத்தியசாலையில் அனுமதி

3 years ago 559

நடிகர் பிரகாஷ் ராஜ் கீழே விழுந்து காயம் ஏற்பட்டிருப்பதால் அவருக்கு விரைவில் அறுவைச்சிகிச்சை செய்யப்படவிருக்கிறது.

நடிகர் பிரகாஷ் ராஜ் வில்லன், குணச்சித்திர வேடம் என தனது நடிப்பாற்றலால் பல்வேறு பரிணாமங்களில் மிரட்டி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

மிரட்டலான வில்லனாக ஒருபுறம் கில்லி, போக்கிரி என மிரள வைத்தால், குணச்சித்திர வேடங்களில் நடித்த மொழி, அபியும் நானும் என தனது நடிப்பால் நெகிழச் செய்வது அவரது சிறப்பு. 

மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த ஓகே கண்மணி, செக்கச் சிவந்த வானம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது இவர் தனுஷ் உடன் இணைந்து 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சுட்டுரைப் பக்கத்தில்,  நான் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டிருக்கிறது. ஹைதராபாத் சென்று கொண்டிருக்கிறேன். 

எனது நண்பரும் மருத்துவருமான குருவா ரெட்டி எனக்கு அறுவை சிகிச்சை செய்யவிருக்கிறார். நான் நலம் பெறுவேன். கவலைப்படத்தேவையில்லை. என்னைப் பற்றி நினைத்துக்கொள்ளுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...