திருமணம் செய்து கொள்ளாமல் போனதற்கு இந்த நடிகர் மட்டும் தான் காரணம்

3 years ago 476

இந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தபு. தமிழ் சினிமாவில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் நடித்து வந்த இவருக்கு தற்போது 51 வயதாகிறது. படங்களில் குணச்சித்திர வேடங்களில் தற்போது நடித்து வருகிறார்.

தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வரும் இவர் தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா காதலித்து வந்ததாக கூறப்பட்டது. பிறகு இவர்களின் காதல் முடிந்து விட்டதாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருப்பதற்கு காரணம் இந்தி நடிகர் அஜய் தேவ்கான் தான் என கூறியுள்ளார்.

அவரை எனக்கு ஆரம்பத்தில் இருந்தே நன்றாக தெரியும். என்னுடைய அண்ணனுக்கு நெருங்கிய நண்பர். எப்போதும் என்னை பின்தொடர்ந்து கொண்டே இருப்பார். நான் எங்கு சென்றாலும் அங்கே வருவார். 

நான் எந்த ஒரு ஆணிடமும் பேசக்கூடாது. அப்படிப் பேசினால் அந்த ஆணிடம் அவர் சண்டை போட்டு விடுவார். அவரால்தான் நான் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

 அஜய் தேவ்கன் மற்றும் கஜோல் ஆகியோர் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் தபு இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...