தெலுங்கு அசுரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

3 years ago 343

பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் படைத்தது.

அசுரன் படம் தெலுங்கில் ‘நாரப்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் தனுஷ் வேடத்தில் வெங்கடேஷும், மஞ்சு வாரியர் வேடத்தில் பிரியாமணியும் நடித்துள்ளார்கள். 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்த சமயத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை.

இந்நிலையில், இப்படம் நேரடியாக ஓடிடி-யில் ஜூலை 20 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...